நூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் நூடுல்ஸ் சூப் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் மருத்துவ மனையில் சிகிக்கை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புக்கு காரணம் அவர்கள் காலாவதியான உணவை சமைத்து உண்டதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்து தெரிவித்து உள்ளனர்.
சீனாவில் வசித்து வந்த ஒரு குடும்பம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி காலை உணவாக நூடுல்ஸ் சூப்பை சமைத்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த உணவை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புக்கு காரணம் அந்தக் குடும்பத்தினர் காலாவதியான நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டதே காரணம் என நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பேக்கிங் செய்யப்பட்ட நூடுல்ஸ் தொடர்ந்து ஒரு வருடமாகப் பதப்படுத்தும் பெட்டியிலேய வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த நூடுல்ஸ் காலாவதியானது தெரியாமலே அந்தக் குடும்பத்தினர் அதை எடுத்து சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
இதனால் நூடுல்ஸில் போங்க்கிரேக் எனும் அமிலத்தின் அளவு அதிகரித்து இருக்கிறது. பொதுவாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு காலாவதி ஆகிவிட்டால் அதில் விஷத்தன்மை கொண்ட அமிலங்கள் உற்பத்தி ஆகிவிடும். அதைப் போலவே பேக்கேஜ் செய்யப்பட்ட இந்த நூடுல்ஸ் பாக்கெட்டிலும் போங்க்கிரேக் எனும் அமிலத்தின் அளவு அதிகரித்து அது பலரது உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. இதனால் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களின் காலாவதி தேதியை சரிபார்த்து சமைக்குமாறு பலரும் கருத்துக் கூறத் தொடங்கிவிட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout