close
Choose your channels

'நிமிர்' டைட்டிலை பிரியதர்ஷனிடம் பரிந்துரை செய்தவர் யார் தெரியுமா?

Wednesday, December 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக ஒரு படம்  எந்த வகையை சேரும் ,அப்படத்தில்  என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய அம்சங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க  அப்படத்தின் தலைப்பு உதவியாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் , நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் , பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , சந்தோஷ் T குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'நிமிர்' என்ற தலைப்பை குறித்து இயக்குனர் ப்ரியதர்ஷன் பேசுகையில் , '' எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குனர் மகேந்திரன் அவர்களின் பெரிய  ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான்  பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு . இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார்  தான் 'நிமிர்' என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த மகன்-தந்தை உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். 'நிமிர்' மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது' என்று கூறியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment