துபாயில் வேலை பார்த்த எனக்கு சென்னைக்கு போக தெரியாதா? மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

  • IndiaGlitz, [Monday,January 06 2020]

துபாய்க்கு வேலைக்கு தனியாக செய்யும் செல்லும் தன்னால் சென்னைக்கு செல்ல முடியாதா? என தந்தையிடம் கோபித்துக்கொண்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி என்ற பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற 24 வயது பெண், துபாயில் பணி புரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் துபாயில் தன்னுடன் பணிபுரியும் தோழி ஒருவரின் தந்தை சென்னையில் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது

இதனால் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்னைக்கு செல்ல வேண்டும் என தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் இரவு நேரத்தில் அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என அவரது தந்தை கண்டிப்பாக கூறிவிட்டதாக தெரிகிறது. துபாய் வரை சென்று வேலைக்குச் செல்லும் தன்னால் பக்கத்தில் இருக்கும் சென்னைக்கு செல்ல முடியாதா? என தந்தையிடம் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனாலும் தந்தை பிடிவாதமாக சென்னைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என தெரிகிறது

இதனால் மனமுடைந்த பிரியா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது தந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி மகளின் உடல் மீது கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண்ணீர் வரவழைத்தது. இதுகுறித்து போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

More News

ஏன் பெண்கள் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள்? - ஹெலன் பிரிக்ஸ்

காலமாற்றத்தாலும் உணவுமுறைகளாலும் மனிதனது ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில் பெண்களைவிட ஆண்களே குறைவான ஆயுட்காலத்தில் இறக்கின்றனர் என்று ஒரு ஜப்பானிய ஆய்வு கூறுகிறது.

பாரில் பழக்கம், பணம் கேட்டு மிரட்டல்: முடிவில் பரிதாபமாக கொலையான பெண்!

https://tamil.oneindia.com/news/mumbai/33-year-old-woman-murder-in-mumbai-city-373403.html

மணிரத்னம் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீங்கள் நினைப்பதை விட உங்கள் ஆழ்மனம் (Subconsious) மிகவும் புத்திசாலி தெரியுமா உங்களுக்கு

நனவு மனம் (Consious), நனவிலி மனம் (Unconsious), ஆழ்மனம் (Subconsious) என்று மனித மனம் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.

பாவம் போக்கும் வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்து வளர்பிறை – பதினோராம் நாளில் பெருமாள் தமது அருளினால் இந்த வைகுண்டத்தின் கதவுகளைத் தமது பக்தர்களுக்காகத் திறந்து வைத்து அருள்பாலிக்கிறார் எனவும் கருதப்படுகிறது.