உயிருடன் புதைக்கப்பட்ட அரியவகை மான்: அதிர்ச்சி வீடியோ
- IndiaGlitz, [Friday,September 06 2019]
பீகார் மாநிலத்தில் நீலான் என்ற அரிய வகை மான், கூட்டம் கூட்டமாக வந்து விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்த பயிர்களை நாசமாக்குவதாக வனத்துறையினர்களுக்கு புகார் வந்தது. இதனையடுத்து நீலான் வகை மான் இனங்களை சுட்டுக்கொல்ல வனத்துறை ஆட்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில வாரங்களில் சுமார் 300 நீலான் வகை மான்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் குண்டடிபட்ட ஒரு மானை ஜேசிபி இயந்திரம் மூலம் உயிருடன் புதைக்கப்படும் வீடியோ ஒன்று சமூக இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த காவல்துறையினர், ‘உயிருடன் விலங்கினங்களை புதைப்பது மனிதத்தன்மையற்ற செயல். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இந்த வீடியோ குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கையின்படி ஜேசிபி டிரைவர் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது