'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இந்த பிரபலம் இயக்க வேண்டிய படமா? வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படத்தின் டைட்டில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ நேற்று வெளியானது என்பதும் இது குறித்த மோசன் வீடியோ வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம். ஆனால் இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இன்னொரு பிரபலம் இயக்க வேண்டிய படம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிக்க விரும்புபவர்கள் தங்களுடைய விபரத்தை அனுப்பலாம் என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதன் பிறகு இந்த படம் ஒரு சில காரணங்களால் உருவாகவில்லை. இந்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து அதே டைட்டிலில் தனுஷ் இயக்கம் இருக்கும் படத்தின் அறிவிப்பு அதே டைட்டிலில் வெளியாகி உள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்த திரைப்படமும் தனுஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படமும் ஒரே கதையா? என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.