நிக்கி கல்ராணியை தாசில்தாராக மாற்றிய இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,October 29 2017]

தமிழ் திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஹர ஹர மகாதேவி' பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையான வசூலை கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அவர் கீ, பக்கா, கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

 'கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது காசி அருகே நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நிக்கி கல்ராணி இந்த படம் குறித்தும் அதில் தன்னுடைய கேரக்டர் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் தான் தாசில்தான் கேரக்டரில் நடித்து வருவதாகவும், ஜீவா, ஜெய் என இரண்டு ஹீரோக்களுடனும் படம் முழுக்க டிராவல் செய்யும் வகையில் இந்த கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்கும்போது தனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்ததாகவும், இந்த படத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்ப்பெண் கேரக்டரை தான் ரசித்து நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரசா, வையாபுரி, மனோபாலா, ரோபோசங்கர், சந்தான பாரதி உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் முதல் பாகம் போலவே காமெடிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

More News

'உறியடி' தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த தகவல்

தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களில் ஒன்று கடந்த ஆண்டு வெளிவந்த 'உறியடி'. அரசியல் த்ரில்லர் படமான இந்த படம் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சமீர் தனது அடுத்த படம்

கமல் களப்பணியால் கலெக்டர் அளித்த அதிரடி வாக்குறுதி

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்தவர் என்ற விமர்சனத்தை உடைக்கும் வகையில் இன்று களப்பணியில் இறங்கினார்.

கிண்டல் செய்த அடையாளத்தை பெருமையாக்கியார் விஜய்: ப.சிதம்பரம் 

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்த வசனங்கள் இருந்தது. இந்த வசனங்களை நீக்க வேண்டும்

கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை, சொல்புத்தியும் இல்லை: அதிமுக மூத்த தலைவர்

எண்ணூர் துறைமுகத்தில் ஆற்றை வழிமறித்து அரசு நிறுவனங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன் இன்று களப்பணியாக அந்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.

கமல் களப்பணி: அரசியல் தலைவர்களின் ரியாக்சன் என்ன?

நடிகர் கமல்ஹாசன் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கு நேரடியாக என்று களப்பணி ஆய்வில் இறங்கியது அப்பகுதி மக்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.