ஆக்சன் நாயகியாக மாறுகிறார் நிகில்கல்ராணி

  • IndiaGlitz, [Thursday,August 06 2015]

ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிய 'டார்லிங்' படத்தின் நாயகி நிகில்கல்ராணி , அந்த படத்தை அடுத்து பாபிசிம்ஹாவுடன் 'கோ 2' மற்றும் ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் எழில் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதை நேற்று நிகில்கல்ராணி உறுதி செய்துள்ளார்.


SIIMA விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ள நிகில்கல்ராணி, அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'எழில் படத்தில் விஷ்ணு ஜோடியாக நான் நடிக்கவிருப்பது உண்மைதான். இந்த படத்தில் நான் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றேன். அதுமட்டுமின்றி இந்த படத்தில் எனக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

.ஏற்கனவே நிகில்கல்ராணி மலையாள படம் ஒன்றிலும், 'யாகாவராயினும் நா காக்க' என்ற படத்திலும் சிறு சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சீரியஸான சண்டைக்காட்சிகளில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் துபாயில் இருந்து சென்னை திரும்பியதும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரொமான்ஸ், ஆக்சன் என வித்தியாசமாக இந்த படத்தில் நிகில்கல்ராணி கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

More News

விஜய்யுடன் நடிக்க விருப்பம். மகேஷ்பாபு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு முதன்முதலாக தனது ஸ்ரீமந்துடு படத்தை தெலுங்கில் ரிலீஸாகும் அதே தினத்தில் தமிழிலும் ரிலீஸ் செய்கிறார்...

விஜய் வில்லனுக்கு ஜோடியான மணிரத்னம் நாயகி

'180' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நித்யா மேனன், அதன் பின்னர் வெப்பம், 'மாலினி 22 பாளையங்கோட்டை' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'ஓகே கண்மணி. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கிய 'காஞ்சனா 2' படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது......

ஜெயம் ரவியின் மூன்றாவது 'யூ' சர்டிபிகேட் படம்

ஜூன் மாதத்தில் ரோமியோ ஜூலியட், ஜூலை மாதத்தில் சகலகலாவல்லவன் என இரண்டு படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்து உற்சாகமாக இருக்கும்...

அஜீத்-அல்லு அர்ஜூன் நடிக்கும் ராஜமவுலியின் அடுத்த பிரமாண்ட படம்

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், தென்னிந்தியாவில் மிக அதிக வசூலை கொடுத்த படம், மிகப்பெரிய போஸ்டர் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்த படம்....

ராகவா லாரன்ஸ் இயக்கும் 'நாகா'வில் ஜோதிகா?

எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் அமோக ஆதரவை...