கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி எப்படி இருக்கின்றார்? இதோ அவரே வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய நிக்கி கல்ராணி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார் என்பதும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’தான் தற்போது முழுமையாக கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். கொரோனா நோயிலிருந்து தான் குணமாக வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் பயத்தை கைவிட வேண்டும் என்றும், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி நடந்து கொண்டால் வெகு எளிதாக கொரோனாவில் இருந்து விடுபடலாம் என்றும் எனவே முதலில் பயத்தை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் மொபைல் போன், டிவி இருப்பதால் இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மொபைல் போன் மூலம் நமது அன்புக்குரியவர்களுடன் பேசி அவ்வப்போது ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தயவுசெய்து தாங்களாகவே மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் உடனடியாக மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நிக்கி கல்ராணியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' ஓடிடியில் ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன

விஜய்யின் 'சர்கார்' படத்துடன் கனெக்சன் ஆன நாகார்ஜூனனின் தமிழ்ப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பதும், அதே போல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா என்பதும் தெரிந்ததே. நாகார்ஜுனா நடித்த 'ஆசாத்'

ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி பிசினஸ், 'மாஸ்டர்' ஓடிடியில் வராதது ஏன்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் ஓடிடியில் தற்போது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

துறை மேம்பாட்டுக்காக கொரோனா பேரிடர் காலத்திலும் அதிரடி திட்டங்களை செயல்படுத்திய தமிழக அரசு!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளருக்கு கொரோனா: கோலிவுட் அதிர்ச்சி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தெரிந்ததே. தினமும் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்