close
Choose your channels

Prank-இல் சிக்கி, திணறிய பிரபல நடிகை… க்யூட் வீடியோ வைரல்!

Friday, November 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

தமிழ் சினிமாவில் கலகலப்பான மற்றும் போல்டான நடிகையாக வலம்வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழைத் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் குழந்தைகளுடன் விளையாடிய ஒரு Prank-இல் மாட்டிக்கொண்டு திணறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழில் “யாகாவராயினும் நாகாக்க“ எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை நிக்கி கல்ராணி. அதற்குப் பிறகு “டார்லிங்“, “கடவுள் இருக்கான் குமாரு“, “மரகத நாணயம்“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் சசிக்குமாருடன் இவர் இணைந்து நடித்த “ராஜவம்சம்“ திரைப்படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. இதைத்தவிர நடிகர் சிவாவுடன் இணைந்து “இடியட்“ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறர்.

நடிப்பை தவிர சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை நிக்கி கல்ராணி, குழந்தைகளுடன் சேர்ந்து பலூன் உடைக்கும் விளையாட்டு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் குழந்தைகள் முதலில் கலர் கலரான பலூனை நடிகை நிக்கி மீது வீசுகின்றனர். அதை ஆசையோடு உடைத்து விளையாடுகிறார்.

பின்னர் திடீரென தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்று நிக்கியை நோக்கி வருகிறது. தெரியாமல் அதை உடைத்து, தண்ணீரால் நனைத்துவிட்ட நடிகை நிக்கி சற்றுக் கோபத்துடண் திணறுகிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment