கர்ப்பம் குறித்த வதந்திக்கு விளக்கம் அளித்த நடிகை நிக்கி கல்ராணி!

  • IndiaGlitz, [Friday,November 18 2022]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில் அதற்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார். 

நடிகை நிக்கி கல்ராணி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘நான் கர்ப்பமாக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் கர்ப்பமாக இருந்தால் முதலில் அந்த செய்தியை வெளியிடும் நபர் நானாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நடிகை நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை கடந்த மே மாதம் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.