நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்க தேர்தலின்போது விஷால் அணியினர் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமிருந்த ஒரே வாக்குறுதியான நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டும் பணியும் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்த கட்டிடம் கட்டுவதற்கு பல நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர். விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கவுள்ள படத்தின் லாபமும் இந்த கட்டிடத்திற்காக செலவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'டார்லிங்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி இன்று நடிகர் சங்கத்தின் கட்டிட நிதியாக ரூ.3 லட்சம் அளித்துள்ளார். அவர் இந்த தொகையை நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமான் அவர்களிடம் வழங்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments