ரெளடி பேபி பாடலுக்கு அப்பாவுடன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Sunday,April 26 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான, ஒரு சில நேரங்களில் மட்டும் சில உருப்படியான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல நடிகை நிக்கி கல்ராணி, தனுஷ் நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரெளடி பேபி’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவருடன் அவருடைய தந்தையும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் நடனமாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடலுக்கு நாங்கள் சரியாக நடனமாட வில்லை என்றாலும் எதிர்காலத்தில் சரியாக நடனம் ஆடுவோம். இப்பொழுது வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இந்த நடனத்தை ஆடி உள்ளோம். அப்பாவுடன் நடனமாடியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது என்று நிக்கி கல்ராணி குறிப்பிட்டுள்ளார். நிக்கி கல்ராணியின் இந்த வீடியோ அவருடைய சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது