டெட் பாடியாக நடிக்க சந்தேகம் கேட்ட நடிகை!
- IndiaGlitz, [Monday,September 13 2021]
டெட் பாடி கேரக்டரில் நடிக்க இயக்குனர் மற்றும் ஹீரோவிடம் சந்தேகம் கேட்ட நடிகை குறித்த தகவல் தற்போது வந்துள்ளது.
மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இடியட். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மிர்ச்சி சிவா பேசியபோது ’இந்த படத்தில் நிக்கி கல்ராணி போன்ற ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையை பார்க்க முடியாது. குறிப்பாக ஒரு காட்சியில் அவர் டெட்பாடி ஆக நடிக்க வேண்டும். ஆனால் அதற்கு என்னிடம் நிறைய டவுட் கேட்டார். அந்த அளவிற்கு அவர் ஒரு சீரியஸான நடிகை என்று கூறினார்.
மேலும் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்திலேயே அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த படத்தை துவங்கியவர் இயக்குனர் ராம்பாலா என்றும் அவருடைய உழைப்பு தான் இந்த படம் நன்றாக வந்ததற்கு காரணம் என்றும் இன்னும் நிறைய வெற்றிப் படங்களை அவர் இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுவாக பேய் படம் என்றால் இருட்டில் பயமுறுத்தும் வகையில் இருக்கும் என்றும், ஆனால் இந்த படத்தில் இருட்டும் இருக்காது, பயமும் இருக்காது, அதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று படத்தின் ரகசியத்தையும் மிர்ச்சி சிவா கூறியுள்ளார்.