இமான் இசையில் நிகிதா காந்தி பாடிய பாடல்.. எந்த படத்திற்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் இமான் இசையில் பாடகி நிகிதா காந்தி பாடிய ஒரு பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த பாடல் எந்த படத்திற்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
பிரபுதேவா மற்றும் வேதிகா இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் ’பேட்ட ராப்' என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இயக்குனர் சீனு என்பவரின் இயக்கத்தில் டி இமான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது என்றும் இந்த படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பெப்பி பாடல் ஒன்றை ஒலிப்பதிவு செய்ததாக இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை நிகிதா காந்தி பாடியதாகவும் இந்த பாடல் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அடுத்து இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடகி நிவேதா காந்தி ஏற்கனவே ஏஆர் ரகுமான், அனிருத் உட்பட பல பிரபல இசையமைப்பாளர்கள் கம்போசிங் செய்த
பாடல்களை பாடியுள்ளார் என்பதும் சமீபத்தில் கூட அவர் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recorded the vibrant Singer Nikhita Gandhi for a peppy number from my upcoming flick “PettaRap”
— D.IMMAN (@immancomposer) June 14, 2023
Starring Prabhudeva and Vedhika in the lead!
A Sinu SJ Directorial!
Produced by Blue Hill Productions!
Lyric by Madan Karky!
A #DImmanMusical
Praise God! pic.twitter.com/2FI7TTnBaC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com