ஒவ்வொன்றையும் ஆராய வேண்டும்: அரைகுறை உடையுடன் போஸ் கொடுத்த நடிகையின் அறிவுரை

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

அரைகுறை உடையுடன் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நடிகை ஒருவர், ‘ஒவ்வொன்றையும் ஆராய்ந்து போக வேண்டும் அவ்வாறு ஆராயும் போது தான் அனுபவங்கள் கிடைக்கும் என்று அறிவுரையும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை நிகிதா சர்மா. இவர் மாகாளி என்ற பக்தி தொடரில் லட்சுமி தேவி என்ற கேரக்டரில் பக்தி பரவசத்துடன் நடித்திருந்தார். மேலும் இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் கிளாமர் இல்லாமல் நடித்தாலும், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உள்ள லட்சக்கணக்கான ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது பிகினி மற்றும் அரைகுறை உடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவு செய்து வந்தார். அந்த புகைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மேலாடை இல்லாமல் ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது அம்மா எடுத்ததாக கூறியிருக்கும் நிகிதா, இந்த புகைப்படத்தில் கேப்ஷனாக, ‘அனுபவம் தான் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் உங்கள் அருகிலுள்ள ஒவ்வொன்றையும் ஆராயுங்கள் என்றும் அவ்வாறு ஆராயும் போதுதான் அனுபவங்கள் கிடைக்கும்’ என்றும் கூறியுள்ளார்.