'எல்லாத்தையும் தின்னு முடிச்சிட்டு இப்ப மனுசக்கறியா? 'பவுடர்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
நிகில் முருகன் நடிப்பில் உருவான ‘பவுடர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னையில் மனிதக்கறி சமைத்து சாப்பிடும் கும்பல் ஒன்றை பிடிக்கும் காவல்துறையின் நடவடிக்கை தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரஹாசன் நடித்த ’தாதா 87’ உள்பட ஒருசில படங்கள் இயக்கிய விஜயஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியாண்டர் லீ மார்ட்டி இசையில் உருவாகிய இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here's the Official Trailer of #Powder
— Nikil Murukan (@onlynikil) October 1, 2022
▶️ https://t.co/PP8fyowOdq#பவுடர் @vidya_pradeep01 @catchAnithra @vijaysrig @im_rajendran #Vaiyapuri @leanderleemarty @RajaDop1 @catchguna @agscinemas @onlygmedia pic.twitter.com/jSRQlItwRy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments