கோழிக்கு ஒரு நியாயம், பசுவுக்கு ஒரு நியாயமா? மாட்டிறைச்சி குறித்து இளம் நடிகை காட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள மொழி சினிமாக்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் நடிகை நிகிலா விமல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் மாட்டிறைச்சி குறித்து காட்டமாகப் பதிலளித்துள்ளார். இவரது கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமானவர்தான் நடிகை நிகிலா விமல். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வசந்தமணி இயக்கத்தில் வெளியான “வெற்றிவேல்” எனும் திரைப்படத்தில் நடிகர் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து “கிடாரி“, “தம்பி“, “ரங்கா“ போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை நிகிலா விமல் மலையாளத்தில் நடித்திருந்த “ஜோ ஜோ“ எனும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் நடிகை நிகிலா விமல் கலந்துகொண்டபோது அவரிடம் மாட்டிறைச்சி தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்குப் பதிலளித்த நடிகை நிகிலா விமல், பசுவை வெட்டக்கூடாது என்பதெல்லாம் புதிதாகப் பேசப்படுகிறது. இதொரு பிரச்சனையே இல்லை. விலங்குகளை வெட்டக்கூடாது என்றால் எந்த விலங்கையும் வெட்டக்கூடாது.
பசுவுக்கு என்று தனித்துவம் எதுவும் இல்லை. வெட்டலாம் என்றால் அனைத்து விலங்கையும் வெட்டலாம். பசுவை மட்டும் வெட்டக்கூடாது, கோழியை வெட்டலாம் என்றால் அது எந்த வகையில் நியாயம். கோழி பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிரினம்தானே. பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா?
மேலும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிடக்கூடாது. முழுமையான சைவமாக மாற வேண்டும். நான் அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் சாப்பிடக்கூடாது என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று காட்டமாகப் பதிலளித்துள்ளார். இவரது கருத்துக்கு ரசிகர்கள் சிலர் ஆதரவு அளித்துவரும் நிலையில் ஒருசில தரப்புகளில் இருந்த விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments