விவாகரத்தை அறிவித்த மெகா ஸ்டார் குடும்பத்தின் வாரிசு நடிகை… அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் தம்பி மகளும் பிரபல நடிகையுமான நிஹாரிகா தனது திருமண முறிவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி மிகவும் வரவேற்பு பெற்ற ஒருவராக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய மகன் ராம் சரணும் தற்போது முன்னணி நடிகராக இருந்துவரும் நிலையில் சமீபத்தில் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதை ஒட்டுமொத்த குடும்பமே சிறப்பித்த நிலையில் தீடீரென நிஹாரிகா கொனிடேலாவின் விவாகரத்து தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிரஞ்சிவியின் முதல் தம்பி நாகேந்திரபாபு தெலுங்கு சினிமாவில் முக்கிய தாயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு வருண் தேஜ் மற்றும் நிஹாரிகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக உள்ள நிலையில் சமீபத்தில் வருண் தேஜ்க்கு நடிகை லாவண்யா திரிபாதியுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய தங்கை நிஹாரிகா தற்போது விவாகரத்து தகவலை வெளியிட்டு உள்ளார்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்துவந்த நிஹாரிகா கடந்த 2015 இல் ‘ஓகா மனசு‘ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து 2019 இல் ‘சைரா நரசிம்மா ரெட்டி‘ திரைப்படத்தில் நடித்து பிரபலமானதை அடுத்து தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஒரு நல்ல நாள்பார்த்து சொல்லவா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அந்த வகையில் குறைவான படங்களில் மட்டுமே நடித்த இவர் கடந்த 2020 இல் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலநுட்ப வல்லுநர் சைதன்யா ஜொன்லகடாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த அண்டு தனது கணவர் இல்லாமல் தோழிகளுடன் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். இதையடுத்து நிஹாரிகா விவாகரத்து செய்யவிருக்கிறார் என்பதுபோன்ற தகவல்கள் வைரலாகப் பேசப்பட்டு வந்தன. அந்தத் தகவல் தற்போது உண்மையாகி இருக்கிறது.
இதுகுறித்து நடிகை நிஹாரிகா, சைதன்யாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு தூண்களாக இருந்த எனது குடும்பத்தினர் நண்பர்களுக்கு நன்றி என்றும் புதிய இயல்புநிலைக்கு செல்ல நாங்கள் சில தனியுரிமையைக் கோருகிறோம் என்றும் தனிப்பட்ட முறையில் புரிந்து கொண்டதற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை நிஹாரிகா தனது விவாகரத்து செய்தியை வெளியிட்டு இருக்கும் நிலையில் அவருடைய சித்தப்பாவான பவர்ஸ்டார் நடிகர் ‘பவண் கல்யாண்’ பற்றிய விவாகரத்து தகவல்களும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில் தற்போது நடிகை நிஹாரிகா தகவல் உறுதியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments