'மெட்ராஸ்காரன்' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகா, தமிழில் ’மெட்ராஸ்காரன்’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான அறிவிப்பை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இளம் இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷான் நிகான், கலையரசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரில்லர் படத்தின் நாயகியாக நிஹாரிகா நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து திரை உலகிற்கு வந்த நிஹாரிகா ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்த நிலையில் அவருடைய அடுத்த தமிழ் படமாக ’மெட்ராஸ்காரன்’ படம் அமைந்துள்ளது.

ஒரு சிறிய ஈகோ ஒரு மனிதனின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக கொண்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை. மதுரை. கொச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இசையமைப்பாளராக சாம் சிஎஸ் இணைந்து உள்ளார் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ’மெட்ராஸ்காரன்’ படத்தில் இவர் இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.