9 நாள் கேப்பில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டம்வென்று 16 வயது சிறுவன் அசத்தல்!
- IndiaGlitz, [Saturday,July 10 2021]
இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரம் நிஹல் சரின் வெறும் 9 நாட்கள் இடைவெளியில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தல் சானையை செய்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர் தற்போது சர்வதேச அளவில் முதல் 100 இடத்திற்குள் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் செர்பியாவின் பெல்கிறேட் நகரில் நடைபெற்ற செர்பியா ஓபனில் கிராண்ட் மாஸ்டர் Vladimir Fedoseev போட்டியில் 9 சுற்றுகள் விளையாடி 7.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்பு சில்வர் லேக் ஓபனில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதனால் 9 நாட்கள் இடைவெளியில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஜுனியர் ஸ்பீடு ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்ற இவர் தற்போது இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டராக அறியப்படுகிறார். தற்போது 9 நாட்கள் இடைவெளியில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சர்வதேச அளவிலான ரேங்கிங்கில் முதல் நுறு இடங்களை பிடித்துள்ளார். தற்போது அவர் 88ஆவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நிஹல் சரினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.