காதலர் தினத்தில் நடிகரை திருமணம் செய்யும் 'மெர்சலாயிட்டேன்' பாடகி

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

ஷங்கர் இயக்கிய 'ஐ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நான் மெர்சலாயிட்டேன்' பாடல் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தவர் பாடகி நீதிமோகன். அதன்பின் ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் இடம்பெற்ற 'மோனா கேஸ்லினோ' விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெற்ற ''நீயும் நானும்', ‘கோ2’ படத்தில் இடம்பெற்ற 'கோஹிலா', ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ‘செல்லாகுட்டி’, ‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற 'இதயனே' உள்ளிட்ட பல பாடல்களை பாடி தற்போது முன்னணி பாடகிகளில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் தற்போது 38 வயதாகும் பாடகி நீதிமோகன், தனது நெருங்கிய நண்பரும், நடிகருமான நிஹகர்பாண்ட்யா என்பவரை திருமணம் செய்யவுள்ளதாகவும், இவர்களது திருமணம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் நிஹகர் பாண்ட்யா சமீபத்தில் வெளியான 'மணிகர்னிகா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் என்பதும் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்ததாக வதந்தியில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.