இது வேறயா???? கொரோனாவுக்கு மத்தியில் நைஜீரியாவில் பரவிவரும் லாசா காய்ச்சல்!!!

  • IndiaGlitz, [Friday,March 13 2020]


ஆப்பிரிக்க நாடானா நைஜீரியாவில் கொரோனாவை விட அதிக பாதிப்பு கொண்ட லாசா காய்ச்சல் வைரஸ் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாக லாசா காய்ச்சல் வைரஸ் ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது கடுமையான ரத்த கசிவு நோய் என்பதால் இதன் பாதிப்பு குறித்து நைஜீரிய மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.

ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் கொரோனா மட்டுமல்ல தற்போது லாசா காய்ச்சல் அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. லாசா காய்ச்சல் என்பது எபோலா போன்றே கடுமையான ரத்தக் கசிவு காய்ச்சல் (VHF) வகையைச் சார்ந்தது ஆகும். இந்தக் காய்ச்சல் நைஜீரியாவில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து சிறிய அளவிலேனும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு லாசா காய்ச்சல் வைரஸ் நவம்பர் மாதம் முதல் நைஜீரியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவி இருக்கிறது. 36 மாநிலங்கள் மற்றும் 26 தலைநகரப் பகுதிகளில் இந்த காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.

விலங்குகளின் சிறுநீர், எலியின் மலம் போன்றவற்றின் மாசுபாடு, உணவு அல்லது கெட்டுப் போன வீட்டு உபயோகப் பொருட்களால் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தப் பொருட்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் போது பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.

கொரோனா போன்றே இந்த வைரஸ் நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப் பட்ட நபர்களின் உடல் திரவம் (வேர்வை போன்று) மற்றும் உடல் உறுப்புகளுடன் தொடர்பு கொள்வதால் இந்த வைரஸ் பெரும்பாலும் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் பெரும்பாலும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப் படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடானா நைஜீரியாவில் இந்த காய்ச்சல் முதன் முதலாக கடந்த 1969 ஆம் ஆண்டு பரவத் தொடங்கியது. அங்குள்ள லாசா என்ற நகரில் இருந்து பரவியதால் இந்த வைரஸ்க்கு “லாசா“ என்றே பெயர் வைக்கப் பட்டு இருக்கிறது. கடந்த 2012 இல் 112 பேரும், 2015 இல் 64 பேரும், 2019 இல் 167 பேரும் இந்த காய்ச்சல் பாதிப்பினால் அந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 144 பேர் லாசா காய்ச்சல் தொற்றுக்கு உயிர் இழந்து இருக்கின்றனர். மேலும் 800 க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

நைஜீரியாவில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு அந்நாட்டு சுகாதார நிறுவனமாக NCDC லாசா காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

ஆச்சரியத்தை வரவழைக்கும் சம்யுக்தா வர்மாவின் யோகா ஸ்டில்ஸ்

சரத்குமார், நெப்போலியன் நடித்த 'தென்காசி பட்டணம்' என்ற தமிழ் படத்திலும் ஒருசில மலையாள படத்திலும் நடித்த நடிகை சம்யுக்தா வர்மா, கடந்த 2002ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிஜூமேனன்

ரஜினிகாந்த் அரசியலை புரிந்து கொள்ள இன்றைய அரசியல்வாதிகளுக்கு தகுதியில்லை: பொன்ராஜ்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் உட்பட அனைவரும் முதல்வர் கனவுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை தன்னைத் தேடிவந்த நிலையிலும் அதனை வேண்டாம்

முதல் ஆளா நீங்கதான் களத்தில நிக்கணும், பயப்படாம வாங்க: ரஜினிக்கு கஸ்தூரி அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட தான்

கனடா பிரதமரின் மனைவியையும் விட்டு வைக்காத கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதையும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முக்கிய விவிஐபிக்களையும் விட்டுவைக்கவில்லை என்பது ஏற்கனவே தெரிந்ததே.

அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது: ரஜினி அரசியல் குறித்து வடிவேலு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.