கூ- க்கு மாறிய நைஜீரியா....! இதுதான் ஊடகங்களில் ட்ரெண்ட்....!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

நைஜீரிய நாட்டில் டுவிட்டர் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவின் கூ-ஆப்-ஐ பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பரவலாக, பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் ஒரு அங்கமாக இந்த சமூகவலைத்தளங்கள் உள்ளது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. கிராமம் முதல் நகரம் வரை பெரும்பாலான மக்கள் வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதை உபயோகிக்க தெரியாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு காலம் மாறிவிட்டது என சொல்லலாம்.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அந்த செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை என்றும் மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுமையான தகவல் தொழில் நுட்ப விதிகளையும் மத்திய அரசு விதித்துள்ளது. டுவிட்டரை தவிர பிற சமூக வலைத்தளங்கள் அரசு கூறுவதை ஒப்புக்கொண்டது. ஆனால் இந்நிறுவனம் மட்டும், அரசு விதித்துள்ள விதிகளை முழுமையாக ஏற்க மறுக்கின்றது. இதற்கிடையில் மத்திய அரசிற்கும், டுவிட்டருக்கும் இடையே ப்ளூ கிட், டூல் கிட் போன்றவை தொடர்பான சண்டைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்தியா மட்டுமில்லாமல், அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளுக்கும், டுவிட்டருக்கும் இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு உள்ளிட்டோரின், டுவிட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்கை நீக்கி விளையாட்டு காட்டியது டுவிட்டர் நிறுவனம்.
இந்நிலையில் நைஜீரிய அரசு டுவிட்டருக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் அந்நாட்டின் அதிபர் முகமது புகாரி, பிரிவினைகளுக்கு எதிரான கருத்துக்கள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இக்கருத்து சரியானது இல்லை என்று கருதிய டுவிட்டர், அக்கருத்தை நீக்கியது. இதனால் கோபமடைந்த அதிபருக்கும், டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே கடும் சண்டை நிலவியதில், முகமது புகாரி அந்நாட்டில் இந்த சமூகவலைத்தளத்திற்கு தடை விதித்தார்.

கூ-ஆப் :

இதையடுத்து அதிபர் செய்த செயல் தான் தற்போது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. டுவிட்டருக்கு பதிலாக நைஜீரியாவில் தற்போது கூ-ஆப் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்நாட்டின் அரசுக்கான அதிகாரப்பூர்வ கணக்கை கூ-ஆப்பில் துவங்கியுள்ளார் முகமது புகாரி. இதனால் இந்த கூ-சமூக வலைத்தளமானது உலகளவில் பிரபலமடையத் துவங்கியுள்ளது.

தொழில்முனைவோர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங்க் பித்வட்கா உள்ளிட்டோரால், பெங்களூரில் துவங்கப்பட்டது தான் கூ-ஆப். இந்தியாவில் உள்ள பிரபல தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இச்செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இங்குள்ள பல்வேறு மாநிலங்களின் அரசு சார்ந்த துறைகளும், முக்கிய செய்திகளை கூ-செயலியில் வெளியிட்டு வருகின்றது. இந்த செயலியானது, முதன் முதலாக கன்னட மொழியில் துவங்கப்பட்டது, இதன்பின் தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் அதில் சேர்க்கப்பட்டது. சென்ற மே-மாத நிலவரப்படி இந்த செயலியை சுமார் 60 மில்லியன் நபர்கள், பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்?

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 14-ல் முடிவடைவதை அடுத்து சற்று முன்னர் ஜூன் 21 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் வேலையை பாருங்கள், எங்களுக்கு எல்லாம் தெரியும்: அட்வைஸ் செய்த நெட்டிசனுக்கு வனிதா பதிலடி!

தனக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன் ஒருவருக்கு 'எங்களுக்கு வாழ்க்கை என்றால் எப்படி வாழவேண்டும் என்பது தெரியும்' என்றும் 'உங்கள் வாழ்க்கை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்'

கொரோனா தடுப்புப் பணிக்கு பிரபல தயாரிப்பாளர் ரூ.1 கோடி நிதியுதவி!

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசிற்கு பிரபல தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்கள் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

விஷ்ணு விஷாலின் கப்பிங் தெரபி: ஆச்சரிய புகைப்படங்கள்

சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்துகொண்ட தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில்

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்!

பூமியில் இருந்து 90 ஒளியாண்டு  தொலைவில் உள்ள புதிய கோள் TOI-1231b ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்