எனக்காக கட்டிய கோவிலை இதற்காக பயன்படுத்துங்கள்: நிதி அகர்வால்

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ’பூமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால். இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் இந்த படங்கள் நல்ல வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் கோயில் எழுப்பி அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினார்கள் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தனது கோயில் குறித்து நிதி அகர்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கோவில் கட்டிய எனது ரசிகர்களை கண்டு நெகிழ்ந்து போனேன். ஆனால் அந்த கோவிலை ஏழைகளின் உணவு வழங்கும் இடமாகவும், மற்றும் கல்விக்காக பயன்படுத்தும் இடமாகவும் பயன்படுத்துங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.