close
Choose your channels

பள்ளியில் படிக்கும்போதே பிகினி போஸ்: நெட்டிசன்களுக்கு நிதி அகர்வால் வேண்டுகோள்! 

Monday, July 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ’பூமி’ ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நிதி அகர்வால் என்பதும் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நிதி அகர்வால் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிதி அகர்வால் பள்ளியில் படிக்கும்போது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் திடீரென சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. அவர் ரகசியமாக இந்த படங்களை வைத்திருந்ததாகவும் ஆனால் எப்படியோ யாரோ இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிவிட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து நிதி அகர்வால் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் நெட்டிசன்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘என்னைப்பற்றிய அந்த புகைப்படம் பரவி வருவதை நான் அடிக்கடி பார்க்கிறேன். மனசாட்சி உள்ள யாரும் இது போன்ற படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இது தேவையற்றது. தயவுசெய்து இந்த மலிவான செயலை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அவரது வேண்டுகோளையும் மீறி தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment