close
Choose your channels

செல்ல நாய்க்குட்டியுடன் பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம்ரவி நாயகி!

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் நடிகைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே அதில் ஒரு பெரிய கூட்டம் கூடும் என்றும் திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டுக்குள்ளேயே எளிமையாக பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்த நடிகையும் தமிழில் ஜெயம்ரவி நடித்து வரும் ’பூமி’ என்ற படத்தின் நாயகியான நிதிஅகர்வால் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை நிதி அகர்வால் தனது செல்ல நாய் குட்டி மற்றும் சகோதரியுடன் தனது வீட்டில் பிறந்த நாள் கேக் வெட்டிய வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கேக் வெட்டுவது போன்றும் அருகில் அவரது நாய் குட்டி இருப்பது போன்ற காட்சிகளும் உள்ளது..

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’இந்த நாள் எனக்கு மிகவும் நல்ல நாள். இந்த ஆண்டே எனக்கு தொழில் ரீதியாக வெற்றிகரமான ஆண்டு. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Happy birthday to me ?? Thank you! ??❤️???? I am feeling so grateful! I’d like to thank every single person who has worked with me in every capacity, every single person who has watched my movies, liked my pictures, followed me, supported me and loved me so much. A special thank you to the media, you have always given me so much love. This year has been a phenomenally successful year for me, work wise and personally. I feel immensely blessed today with all the love pouring in. Thank you to all my fans I love you. You are my family and my backbone ????❤️ Nidhhi Agerwal Ps: thank you @tanveagerwal for all the baking and decorations ?? and happy is just not able to control himself from jumping on the cake ??

A post shared by Nidhhi Agerwal ?? (@nidhhiagerwal) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment