உதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா? சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் மகிழ்திருமேனி பெயரும் உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 4-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக அனு இமானுவேல் நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தன. இவர் ஏற்கனவே விஷாலின் ‘துப்பறிவாளன்’, ‘சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அனு இமானுவேலுக்கு பதிலாக நிதி அகர்வால் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே நிதி அகர்வால் ஜெயம் ரவியின் ’பூமி’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் தற்போது சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’சம்பவம்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. உதயநிதி படத்தில் நிதி அகர்வால் நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிஸியாக இருக்கும் நிதி அகர்வால் தற்போது தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவது அவரது அதிர்ஷ்டத்தை காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

கமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் தினந்தோறும் நடக்கும் சண்டைகளில் ஒன்றாக அர்ச்சனா மற்றும் பாலாஜி சண்டையை எடுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் தானே முன்னின்று இருக்க வேண்டும்

பிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ!

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே வித்தியாசமான போட்டியாளராக இருப்பவர் சுரேஷ் தான். பொதுவாக வயதான போட்டியாளர்கள் எனக்கென்ன என்று அமைதியாக இருப்பார்கள்

தியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பின்படி சமீபத்தில் பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன

இந்த வாரம் எவிக்சன் யார்? பரபரப்பு தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் ஆஜித், சுரேஷ், அனிதா, பாலாஜி மற்றும் ஆரி ஆகிய ஐவர் உள்ளனர். இதில் குறைவான வாக்குகள் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்

அப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்???

கன்னியாக்குமரி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.