பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தலைமுடியில் தீ விபத்து: நடிகைக்கு நேர்ந்த விபரீதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை ஒருவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை அணைக்கும் போது அவருடைய தலைமுடியில் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகை நிக்கோல் ரிச்சி. இவர் சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஏற்றி வைக்கப்பட்டு இருந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தார். அப்போது திடீரென அவரது தலை முடியில் மெழுகுவர்த்தி தீ பட்டு, தலைமுடி சேதமடைந்தது
இதனை அடுத்து அவருடைய உடல் முழுவதும் தீ பரவாமல் இருக்க அருகில் இருந்தவர்கள் உதவி செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்தில் நடிகை ரிக்கோலஸ் ரிச்சிக்க்கு எந்தவிதமான காயமும் இல்லை என்றாலும் அவருடைய தலைமுடி சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
அமெரிக்க தொலைக்காட்சியின் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கோலஸ் ரிச்சிக்கு நடந்த தீ விபத்தால் அவருடைய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
nicole richie’s birthday cake really set her on fire pic.twitter.com/BBuNQZmB5O
— bae joon-ho (@paristexxas) September 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments