டி10 லீக் போட்டிகளில் ஒரு வரலாற்று சாதனை… ஒரு வீரரைப் பார்த்து மிரளும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அபுதாபியில் நடைபெற உள்ள 14 ஆவது ஐபிஎல் சீசன் போட்டிகளுக்கு முன்னதாக அங்கு டி10 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நார்தன் வாரியர்ஸ் அணியில் இடம்பெற்ற நிக்கோலஸ் பூரன் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். அதாவது டி10 போட்டியில் அவர் 26 பந்துகளுக்கு 86 ரன்களை குவித்து இருக்கிறார்.
நார்தன் வாரியர்ஸ் அணிக்கும் பங்களா டைகர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 89 ரன்களை குவித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் அணியின் வெற்றியை உறுதிச் செய்து இருக்கிறார். இதுவரை டி10 போட்டிகளில் 30 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டதே இல்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சாதனையைப் படைத்த நிக்கோலஸ் நம்முடைய ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார். இதனால் வரும் 2021 ஐபிஎல் போட்டிகளுக்காக தற்போது இவர் தக்கவைக்கப்பட்டு உள்ளார். மேலும் சாதனை படைத்த இந்த இன்னிங்கிஸ் அவர் 12 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி இருக்கிறார். இதன்மூலம் டி10 லீக்கில் அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையாளர் என்றும் அவர் பாராட்டப்பட்டு வருகிறார்.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி பந்து வீசியது. இன்னிங்ஸைத் தொடங்கிய நார்தன் வாரியஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்களை குவித்து இருந்தது. பின்னர் விளையாட ஆரம்பித்த பங்காள டைகர்ஸ் அணி 163 ரன் இலக்குடன் விளையாடியது. ஆனால் 132 ரன்களை மட்டுமே எடுத்ததால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டி10 போட்டிகளில் வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout