close
Choose your channels

என்.ஜி.கே டீசரை வெளியிடும் என்.ஜி.கே! புதிய அறிவிப்பு

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடித்துள்ள 'என்.ஜிகே திரைப்படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த டீசர் கார்த்தியின் 'தேவ்' வெளியாகவுள்ள திரையரங்குகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,.

இந்த நிலையில் 'என்.ஜிகே. டீசரை ஒரு பிரபலம் வெளியிடவுள்ளதாக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் டீசரை இந்த படத்தில் என்.ஜி.கே ஆக நடித்துள்ள சூர்யாவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சமூக வலைத்தள பக்கம் உறுதி செய்துள்ளது.

செல்வாகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment