என்.ஜி.கே டீசரை வெளியிடும் என்.ஜி.கே! புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 12 2019]

நடிகர் சூர்யா நடித்துள்ள 'என்.ஜிகே திரைப்படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த டீசர் கார்த்தியின் 'தேவ்' வெளியாகவுள்ள திரையரங்குகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,.

இந்த நிலையில் 'என்.ஜிகே. டீசரை ஒரு பிரபலம் வெளியிடவுள்ளதாக நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் டீசரை இந்த படத்தில் என்.ஜி.கே ஆக நடித்துள்ள சூர்யாவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சமூக வலைத்தள பக்கம் உறுதி செய்துள்ளது.

செல்வாகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

 

More News

சென்னை அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இரண்டே மாதங்களில் முடிவுக்கு வந்த விஜய்சேதுபதியின் படம்!

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஒருசில நடிகர்களின் திரைப்படங்கள் வருடக்கணக்கில் படமாக்கப்பட்டு

இது காஜல் அகர்வாலின் '96' வெர்ஷன்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் பலர் தங்களுடைய பள்ளிகால மலரும் நினைவுகளில் மூழ்கியது மட்டுமின்று பள்ளி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ச

பிரபல நடிகரின் கட்சியில் இணைந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர்

தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளராக பணியாற்றிய ராம்மோகன் ராவ், பிரபல தெலுங்கு நடிகரின் கட்சியில் இணைந்துள்ளார்.

தேர்தல் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபல நடிகர்!

பிரபல நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் ரிலிசுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக இந்த படம் காத்திருந்தது