ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் கார்த்திக்கு இந்த படம் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'தேவ்' ரிலீஸ் ஆகும் அதே 14ஆம் தேதி சூர்யாவின் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இந்த டீசரை வரவேற்க சூர்யா ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி 'தேவ்' ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் 'என்.ஜி.கே. படத்தின் டீசரையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு இந்த தகவல் இரட்டை விருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.

More News

சேரனின் 'திருமணம்' ரன்னிங் டைம்

இயக்குனர் சேரன் இயக்கி நடித்த 'திருமணம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்

ரஜினி மகள் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமணம் இன்று காலை லீலா பேலஸில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

ரஜினியின் அடுத்த படத்தில் 'தளபதி -துப்பாக்கி' கனெக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

அருண்விஜய்யின் 'பாக்சர்' படத்தில் நாயாகியான பாக்ஸர் வீராங்கனை

நடிகர் அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக்பாஸ் சென்றாயனுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சென்றாயனின் வெகுளித்தனம் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே.