'என்.ஜி.கே' டீசர் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் இந்த டீசருக்கான டப்பிங்கை நேற்று சூர்யா முடித்தார்

இந்த நிலையில் இந்த டீசர் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து 'காத்திருப்பேம்' என்று அறிவித்துள்ளார்

எஸ்.ஆர்.பிரபுவின் இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் டுவிட்டரில் #காத்திருப்போம்' என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டிரண்டுக்கு கொண்டுவந்து விட்டனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.