சூர்யாவின் 'என்.ஜி.கே' ரன்னிங் டைம் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட மற்ற தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் காதலர் தினமான நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாளை வெளியாகவுள்ள கார்த்தியின் 'தேவ்' படம் திரையிடும் திரையரங்குகளில் 'என்.ஜி.கே. படத்தின் டீசரும் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த டீசரின் சென்சார் பணிகள் முடிவடைந்து 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த டீசரின் ரன்னிங் டைம் ஒரு நிமிடம் ஆறு வினாடிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளது.