சூர்யாவின் 'என்.ஜி.கே.' சிங்கிள் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடல் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் இந்த பாடல் ஆரம்பிக்கும் வரி குறித்த தகவலை சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வாரியர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாடல் 'தண்டல்காரன்' என்று ஆரம்பிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடல் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது