தெலுங்கு மாநில சூர்யா ரசிகர்களுக்கு ஒர் இனிப்பான செய்தி!

  • IndiaGlitz, [Saturday,May 18 2019]

சூர்யாவின் 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் புரமோஷன் பணி ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சூர்யாவுக்கு தமிழகத்தை போலவே தெலுங்கு மாநிங்களிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக சூர்யாவின் படங்கள் அங்கு ஓப்பனிங் வசூலை கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழில் வெளியாகும் அதே மே 31ஆம் தேதி 'என்.ஜி.கே. படம் தெலுங்கிலும் ரிலீசாகவிருப்பதாக இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீசத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தி சூர்யாவின் தெலுங்கு மாநில ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக உள்ளது.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
 

More News

'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிய திரைப்படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

விஜய்சேதுபதியின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து அவற்றில் பெரும்பாலான படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார்

பிரதமர் மோடியின் 2வது பிரஸ்மீட்: கலாய்த்த கஸ்தூரி

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் இந்த பேட்டியிலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவே இல்லை.

கடனை திருப்பி கேட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த நண்பர், அந்த இளம்பெண்ணை லாட்ஜ் அறை ஒன்றில் பாலியல்  பலாத்காரம் செய்து

ரஜினி கட்சி தொடங்குவது எப்போது? தமிழருவி மணியன் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.