சூர்யாவின் 'என்.ஜி.கே': முதல் நாள் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை!

  • IndiaGlitz, [Wednesday,May 08 2019]

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே'. திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றது.

இந்த நிலையில் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தின் இணையதளத்தில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரத்தில் முதல் நாள் காட்சிகளுக்குரிய அனைத்து டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்துவிட்டது. இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதும், ஓப்பனிங் வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தவுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More News

தயாரிப்பாளர் சங்கத்தில் பாரதிராஜா, எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர்களுக்கு புதிய பதவி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் தனி அலுவலரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என்பது தெரிந்ததே.

காதலியின் கருவை கலைத்து, திருமண செய்துகொள்வதாக அழைத்து சென்று... விஷம் கொடுத்து கொள்ள துணிந்த காதலன்!

சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில், சேலத்தைச் சேர்ந்த லோகநாதன்( 26) என்பவரும், சென்னையைச் சேர்ந்த பிரியா (23) என்பவரும், ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர்...

பிரச்சாரத்தை விட கழுதை உயிர் தான் முக்கியம்! ஓடிப்போய் உதவிய மேனகா காந்தி!

மத்திய அமைச்சரும், இந்திரா காந்தியின் மருமகளுமான மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்த தந்தை-மகன்!

ஜெயம்ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'அடங்கமறு' திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டன் சிவா மற்றும் நடன இயக்குனராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர்

கணிதமேதை சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் அஜித் நாயகி!

கணித மேதை சகுந்தலா தேவி என்றால் இந்தியாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெங்களூரை சேர்ந்த சகுந்தலாதேவி, கம்ப்யூட்டரைவிட வேகமாக கணக்குகளை முடித்து