சிஎஸ்கே அணிக்கு சோதனை மேல் சோதனை: மேலும் ஒரு வீரர் விலகல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் களமிறங்கிய தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இரண்டு போட்டிகளிலும் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் சென்னை அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே காயம் காரணமாக கேதார் ஜாதவ் அணியில் இருந்து விலகியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் காயம் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சென்னையில் இனி சிஎஸ்கே அணியின் போட்டிகள் நடைபெறாது என்றும், அந்த போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா அரசு புனேவில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே இந்த போட்டிகள் எங்கு நடக்கும் என்பது உறுதியாக தெரியாத நிலை உள்ளது.
இவ்வாறு சோதனை மேல் சோதனைகளை சந்தித்து வரும் சிஎஸ்கே அணிக்கு தற்போது மேலும் ஒரு சோதனையாக இந்த அணியின் நட்சத்திர வீரர் லுங்கி நிகிடியின் தந்தை ஜெரோம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அவர் உடனடியாக தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதுவரை சிஎஸ்கே அணி ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் இவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout