நெய்வேலி லிக்னசைட் ஆலையில் ஏற்பட்ட விபத்து!!! 17 பேர் காயம் மற்றும் பரபரப்பு தகவல்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நெய்வேலி லிக்னைட் ஆலையில் 2 ஆம் நிலையில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. 2 ஆம் நிலையில் இருக்கும் யூனிட் 5 வெடித்து சிதறியாதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தினால் யூனிட் 2 இல் வேலைப் பார்த்த பலரும் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது. இதனால் நெய்வேலி பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நெய்வேலி லிக்னைட் ஆலையில் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. நேற்று விசாகப் பட்டினத்தில் தனியாருக்குச் சொந்தமான கெமிக்கல் நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற சம்பவத்தோடு சேர்த்து விசாகப் பட்டினத்தில் இதுவரை 3 விஷவாயு கசிவு சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பும் நெய்வேலி நிலக்கரி ஆலையில் இதுபோன்ற விபத்து நடைபெற்றது. தற்போது 5 ஆவது யூனில் நடைபெற்ற விபத்தால் 17 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் விரிவான தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Major blast in Stage -2 of the #Neyveli lignite plant.
— Mugilan Chandrakumar (@Mugilan__C) July 1, 2020
Unit 5 in the Neyveli lignite plant has exploded.
Sources say atleast 17 injured many are struck inside the unit 2,Casualties feared. Rescue operations is underway. pic.twitter.com/06xX09HHMI
Massive boiler blast at NLC - Neyveli Lignite Corporation Limited Unit 5, Plant 2. 4 Dead. 17 severely injured. pic.twitter.com/uSCEzAEYcz
— ரமேஷ்முருகேசன் (@rameshibn) July 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout