நெய்வேலியில் பாய்லர் வெடித்து விபத்து: 10 பேர்கள் படுகாயம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்ததால் ஆயிரக்கணக்கானோர் திடீர் திடீரென மயங்கி விழுந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விபத்து நெய்வேலியில் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் வரை காயமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் சற்று முன்னர் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. இதனால் அங்கு பணியில் இருந்த 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அனல் மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக நெய்வேலி அனல்மின் நிலைய வளாகம் முழுவதும் புகை மூட்டத்துடன் சூழப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
#BreakingNews:మరో ఇండస్ట్రియల్ విషాదం- తమిళనాడు, నేవేలి లోని NLC సోలార్ పవర్ ప్లాంట్ లోని ఓ బాయిలర్ బ్లాస్ట్ అయ్యింది
— Pawan Kalyan Fan (@mahidhfpspk) May 7, 2020
ఈ బ్లాస్ట్ లో ఏడుగురికి భారీగా గాయాలయ్యాయి. అధికారులు వారిని రెస్క్యూ చేస్తున్నారు#Neyveli #TamilNadu #BoilerBlast #ChattisgarhGasLeak pic.twitter.com/jGxSj9hpI3
Blast in NLC thermal plant #Neyveli pic.twitter.com/BhPlF6qnda
— Arun Kumar ????❤️❤️❤️❤️❤️❤️❤️ (@Kumarsivesh111) May 7, 2020
#Neyveli boiler accident, 7 injured as per initial reports ?? pic.twitter.com/Zg70B5pyYI
— சீர்திருத்தவாதிகள் (@Reformists_) May 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments