அடுத்த வாரம் டைரக்ட் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்.. ஜோவிகா கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க்கில் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள், ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை வீழ்த்தினர். இதனை அடுத்து பிக் ஹவுஸ் போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை என பிக்பாஸ் தெரிவித்தார்.

இதனை அடுத்து தோல்வி அடைந்த அணியில் உள்ள யாராவது ஒருவரை பிக் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்கள் தேர்வு செய்து அவரை நேரடியாக அடுத்த வாரம் நாமினேஷனுக்கு அனுப்பலாம் என்று பிக் பாஸ் கூறினார்.

இதனை அடுத்து ஜோவிகா எழுந்து வந்து விஷ்ணுவை நாமினேட் செய்வதாக கூறினார். இந்த வாரம் விஷ்ணு நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தார் என்றும் அதனால் அவருடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்றும் ஒருவேளை அவர் நாமினேஷனில் இருந்திருந்தால் அதை தவிர்த்து இருப்பார் என்றும் அதனால் தான் அவரை அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேஷன் செய்கிறோம் என்றும் காரணம் கூறினார்.

இந்த காரணத்தை விஷ்ணு அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எதிர்வினை என்ன ஆகும் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய் சம்பளம் இருக்கட்டும்.. 'லியோ' படத்தில் நடித்தவர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆயுத பூஜை நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த படம் ஆறு நாட்களுக்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது

'லியோ' படம் தொடங்கும் முன் 2 நிமிடங்கள் மெளனம் கடைபிடித்த விஜய் ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில்  புதுக்கோட்டையில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கும் முன்  விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இரண்டு நிமிடம்  மௌனம்

மடியில் தூங்கும் குழந்தையை அன்புடன் கால் அமுக்கி விடும் நயன்.. வைரல் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது மடியில் தூங்கும் குழந்தையின்  கால் அமுக்கி விடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ராதா மகளுக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படம்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அவர் பதிவு செய்த புகைப்படத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

படுக்கையறை காட்சிகளுடன் பாலாஜி முருகதாஸின் 'ஃபயர்'.. கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸ் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றும்