கேப்டன் டாஸ்க்கில் தொடர்ந்து தோல்வி.. கதறியழுத போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Friday,November 24 2023]

பிக் பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க்கில் நான்கு முறை கலந்துகொண்டு தோல்வி அடைந்த நிலையில் இந்த முறையும் தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த போட்டியாளர் கதறியழுத காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வார இறுதியிலும் அடுத்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் வைக்கப்படும். அதில் தேர்வு செய்யும் போட்டியாளர்கள் கேப்டனாக முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் விஷ்ணு, ஜோவிகா மற்றும் நிக்சன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். மூவரும் கேப்டன் ஆக வேண்டும் என்ற பரபரப்பில் விளையாடிய நிலையில் எதிர்பாராத வகையில் ஜோவிகா இந்த முறையும் தோல்வி அடைந்து விட்டார்.

ஏற்கனவே நான்கு முறை அவர் கேப்டன் டாஸ்க்கில் கலந்து கொண்டு தோல்வி அடைந்த நிலையில் ஐந்தாவது முறையும் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் மனம் வருந்தி கதறி அழுதார். இதனை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிக்சன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நடந்த நிலையில் விஷ்ணு ஜெயித்து விட்டது போன்று இன்றைய ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. அடுத்த வாரம் விஷ்ணுவின் கேப்டன்ஷிப்பில் அதிரடி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விபத்தில் சிக்கிய சூர்யா எப்படி இருக்கிறார்? அன்பான ரசிகர்களுக்கு அவரே செய்த பதிவு..!

நடிகர் சூர்யா நேற்று 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தன்னுடைய

ஹாலிவுட் ரசிகர்களுக்காக 'லியோ' குழுவினரின் மாஸ் முயற்சி.. வேற லெவல் தகவல்..!

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர்களுக்கு தமிழகத்தை தாண்டி, இந்தியாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் ரசிகர்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஹாலிவுட் திரையுலக

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் விவகாரம்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கெளதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கூட தயாரிப்பு தரப்பிலிருந்து இன்று படம்

வீரப்பனின் வாழ்க்கை வரலாறு ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ்.. டிரைலரை வெளியிட்ட ZEE5

'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன்  வீரப்பனின்  வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும்  ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு.. கடைசி நேரத்தில் வந்த பரபரப்பு தகவல்..!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நேரத்தில்