close
Choose your channels

சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக வரும் 'நாலு நிமிஷம்'

Friday, November 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற ’நாலு நிமிஷம்’ என்ற லிரிக் விடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூரரைப்போற்று படத்தின் பாடல்கள், வீடியோ லிரிக் பாடல்கள், டிரைலர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment