பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சந்திப்பு. மோடி அரசின் புதிய திட்டம்.. வரப்போகிறது என்.பி.ஆர்..!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை வரும் செவ்வாய்க்கிழமை கூட இருக்கும் நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து, ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், 2020-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து இன்று அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார். டெல்லியில் உள்ள சாணக்கியாபுரியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திராவில் நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் அமைச்சர்கள் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்துக்காகப் பிரதமர் அலுவலகம் அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த கூட்டம் நடைபெறும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு, தனியார் வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்காக அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சர்கள் குழுவிலும் 8 முதல் 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள அமைச்சர்கள் தங்களின் துறைரீதியாகச் செயல்பாடுகளை விளக்கிக் கூறுவார்கள்.
இந்நிலையில், அமைச்சர்கள் குழுக் கூட்டம் இன்று முடிந்தபின், செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, நாடுமுழுவதும் ஒவ்வொருவீட்டிலும் கணக்கெடுப்பு 2020ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-தேதிவரை நடத்தப்படும். இதன் மூலம் ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நாட்டில் வசிக்கும் மக்கள் குறித்த முழுமையான அளவை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பயோமெட்ரிக் தகவலும் இடம் பெறும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதன்படி நாட்டில் எந்த பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்பிஆர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பயமாகவும் இருக்கு, சந்தோஷமாகவும் இருக்கு: 'தலைவர் 168' பட நடிகையின் டுவிட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் கலந்துகொள்ள இருக்கும் பிரபல நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில்

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன்

கூகுள் சுந்தர்பிச்சையின் சம்பளம் எவ்வளவு? ஒரு ஆச்சரியமான தகவல்

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்த தமிழகத்தின் சுந்தர் பிச்சை சமீபத்தில் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் என்ற நிறுவனத்திற்கும் சி.இ.ஓவாக பொறுப்பேற்றார்.

"இந்தியாவைப் போல நாங்களும் குடியுரிமை திருத்தம் கொண்டு வரட்டுமா"..?! மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஆதங்கம்.

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தன்னுடைய எதிர்ப்பை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதிவு செய்துள்ளார்.

திமுக பேரணியில் நடிகர் சங்கம் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சிகள் இணைந்து பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது.