13 நாட்களில் அடுத்த படத்தின் கதை ரெடி: பிரபல இயக்குனர் தகவல்
- IndiaGlitz, [Tuesday,September 29 2020]
பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் நடித்த ‘அழகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் ’சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல இயக்குநர் தங்கர்பச்சான்.
இவர் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருந்ததால் தனது சிந்தனை நசுக்கப்பட்டு தவித்து இருந்ததாகவும் ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்ட பின்னர் இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்களில் தனது அடுத்த படத்தின் கதை திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எக்காலத்துக்கும் பேசப்படும் வகையில் அமைந்துள்ள இந்த கதையின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன்.
ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன்.
— தங்கர் பச்சான் (@thankarbachan) September 28, 2020
இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். pic.twitter.com/RCWVjt0hEK