வர்தாவை தொடர்ந்து அடுத்து வருகிறது 'அஸ்ரி' புயல்

  • IndiaGlitz, [Friday,December 16 2016]

கடந்த திங்கட்கிழமை வீசிய வார்தா புயலின் தாக்கத்தில் இருந்தே இன்னும் சென்னை உள்பட ஒருசில நகரங்கள் மீண்டு வராத நிலையில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்தம் அந்தமானுக்கு தென்திசையிலும் சுமத்ரா தீவுக்கு வடக்குத் திசையிலும் உருவாகியுள்ளதாகவும், இது மேலும் வடக்கு அல்லது வட மேற்கு திசையில் நகர்ந்து ஓரிரு நாட்களில் தமிழக கடலோரத்திற்கு நகரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தம் புயலாக மாறினால் அதற்கு அஸ்ரி' (Asiri) என்று பெயரிடப்படும் என தெரிகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்தாலும் இம்முறை தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

சசிகலா டைட்டிலில் திரைப்படம். பிரபல இயக்குனர் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஒலித்து கொண்டிருக்கும் ஒரு பெயர் என்றால் அது சசிகலா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' ரிலீஸ் தேதி

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரும் பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடித்த 'கடவுள் இருக்குறான் குமாரு' சமீபத்தில் ரிலீஸ் ஆகிய நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'புரூஸ்லீ' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கடந்த 1ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் பூரண நலம் பெற்று டிசம்பர் 7ஆம் தேதி வீடு திரும்பினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

9 வருடங்களுக்கு பின் நிகழும் விஜய்-சூர்யா ஆச்சரிய மோதல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் விஜய் ரசிகர்களுக்காக பொங்கல் தினத்தில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய சூர்யாவின் 'எஸ் 3' திரைப்படமும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் தெலுங்கானா அரசுக்கு செல்லுமா? புதிய வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவருடைய ரத்த சொந்தங்களும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சொந்தமான ஐதராபாத்தில் உள்ள சொத்துக்களை தெலுங்கானா அரசு ஏற்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.