வர்தாவை தொடர்ந்து அடுத்து வருகிறது 'அஸ்ரி' புயல்
- IndiaGlitz, [Friday,December 16 2016]
கடந்த திங்கட்கிழமை வீசிய வார்தா புயலின் தாக்கத்தில் இருந்தே இன்னும் சென்னை உள்பட ஒருசில நகரங்கள் மீண்டு வராத நிலையில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்தம் அந்தமானுக்கு தென்திசையிலும் சுமத்ரா தீவுக்கு வடக்குத் திசையிலும் உருவாகியுள்ளதாகவும், இது மேலும் வடக்கு அல்லது வட மேற்கு திசையில் நகர்ந்து ஓரிரு நாட்களில் தமிழக கடலோரத்திற்கு நகரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்த காற்றழுத்தம் புயலாக மாறினால் அதற்கு அஸ்ரி' (Asiri) என்று பெயரிடப்படும் என தெரிகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்தாலும் இம்முறை தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை வட்டாரங்கள் கூறுகின்றன.