கொரோனாவால் வேலையிழந்தவர் திடீரென கோடீஸ்வரரான அதிசயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த நிலையில் திடீரென அவர் கோடிஸ்வரராகியுள்ள அதிசயம் நடந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டின் ஹேமில்டன் என்ற நகரை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையை இழந்தார். ஆனாலும் அவரது மனைவி அந்நாட்டு சுகாதார துறையில் பணியாற்றி வந்ததால் ஓரளவு வீட்டுச் செலவுகளை சமாளித்து வந்தனர்.
இந்த நிலையில் இணையதள நிறுவனம் ஒன்று நடத்தும் லாட்டரி ஒன்றை அந்த நபர் வாங்கியுள்ளார். குலுக்கல் நாளன்று அவர் முடியை பார்த்த போது தனக்கு ரூபாய் 47 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவரும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரூ.47 கோடி பரிசு விழுந்தாலும், இந்த பணத்தை வைத்து தாங்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்றும் எப்பொழுதும் போல தங்களுடைய இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து முடிந்தவரை பிறருக்கு இந்த கொரோனா நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த நபர் திடீரென கோடீஸ்வரராகியுள்ளது நியூசிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments