கொரோனாவால் வேலையிழந்தவர் திடீரென கோடீஸ்வரரான அதிசயம்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து, வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த நிலையில் திடீரென அவர் கோடிஸ்வரராகியுள்ள அதிசயம் நடந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஹேமில்டன் என்ற நகரை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையை இழந்தார். ஆனாலும் அவரது மனைவி அந்நாட்டு சுகாதார துறையில் பணியாற்றி வந்ததால் ஓரளவு வீட்டுச் செலவுகளை சமாளித்து வந்தனர்.

இந்த நிலையில் இணையதள நிறுவனம் ஒன்று நடத்தும் லாட்டரி ஒன்றை அந்த நபர் வாங்கியுள்ளார். குலுக்கல் நாளன்று அவர் முடியை பார்த்த போது தனக்கு ரூபாய் 47 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவரும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.47 கோடி பரிசு விழுந்தாலும், இந்த பணத்தை வைத்து தாங்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்றும் எப்பொழுதும் போல தங்களுடைய இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து முடிந்தவரை பிறருக்கு இந்த கொரோனா நேரத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த நபர் திடீரென கோடீஸ்வரராகியுள்ளது நியூசிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

யாருக்கும் சம்பளம் இல்லை: புதிய முயற்சியில் விஜய்சேதுபதி-கே.எஸ்.ரவிகுமார்

ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், டெக்னீஷியன் உள்பட அனைவரும் லாபம் அடைவார்கள். ஆனால் அதே திரைப்படம் தோல்வி அடைந்தால்

யூடியூப் வீடியோவை பார்த்து காதலரை தாக்கிய நடிகை: வைரலாகும் வீடியோ

பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் யூட்யூப் வீடியோவை பார்த்து தனது காதலரை தாக்கிய வீடியோ பயங்கரமாக வைராகி சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்

கடும் உணவு பஞ்சத்தால் தத்தளிக்கும் மத்திய கிழக்கு நாடுகள்!!! மேலும், 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!

கொரோனா மத்திய கிழக்கு நாடுகளில் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரானில் மட்டும் 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது

இந்தியாவில் ஒரே நாளில் 6000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,12,359ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6000க்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

டிக்டாக் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கில் போட்டு வீடியோ எடுத்த வாலிபர் கைது!

டிக் டாக்கில் லைக்ஸ்கள் பெறுவதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக இருப்பது டிக்டாக்கில் வெளிவரும் வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது.