close
Choose your channels

சூப்பர் டீலக்ஸ்: சமந்தாவின் நடிப்புக்கு சர்வதேச ஊடகம் பாராட்டு

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நடிப்பில் யுவன்ஷங்கர்ராஜா இசையில் உருவாகியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இருப்பினும் நேற்று வெளிநாட்டிலும், சென்னையில் பத்திரிகையாளர்கள் காட்சியும் திரையிடப்பட்டதால் பெரும்பாலான இணையதளங்களில் இந்த படத்தின் விமர்சனம் வந்துவிட்டது.

பத்திரிகையாளர்கள் இந்த படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த விமர்சனத்தில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராட்டிய நியூயார்க் டைம்ஸ், சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் கோடிட்டி காட்டி பாராட்டு தெரிவித்துள்ளது. விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் இந்த படத்தில் பிரமாதமாக நடித்திருந்தபோதிலும் சமந்தா இந்த கேரக்டரை துணிச்சலாக ஏற்று நடித்ததற்கு கிடைத்த வெகுமதியாக இந்த விமர்சனம் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment